NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இனி Passwordஐ வெளி ஆட்களிடம் பகிர முடியாது “Netfilix”நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "Netfilix"உலகின் முன்னணி OTT  தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

“Netfilix”நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Passwordஐ பிறருடன் பயனர்கள் பகிர்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. விரைவில் இது மற்ற நாடுகளுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவிலும் “Netfilx” தங்களின் Passwordஐ பிறரிடத்தில் பகிர்வது முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து “Netfilix” வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”Netfilix கணக்கு என்பது ஒரு குடும்பம் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் அவர்கள் எங்கிருந்தாலும் வீட்டில், பயணத்தில், விடுமுறையில் அந்த கணக்கை பயன்படுத்தலாம்” என்று கூறியுள்ளது.

இதன்மூலம் இனி ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் மட்டுமே ஒரு “Netfilix” கணக்கை பயன்படுத்த முடியும். வெளியாட்களுடன் Passwordஐ பகிர்ந்தால் அதற்கென தனியாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதனை எப்படி அந்நிறுவனம் கண்காணிக்க உள்ளது என்பது குறித்த விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. IP adders, Device ID மற்றும்”Acount Activity” மூலம் இது கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.

Share:

Related Articles