கடந்த 2022ம் ஆண்டு வெளியான பொலிவுட் படம் தான் “The Kashmir Files” இந்தப்படத்தை “விவேக் அக்னிஹோத்ரி” இயக்கியிருந்தார்.
அந்த ஆண்டில் பொலிவுட்டில் அதிகபட்ச வசூலை குவித்த இப்படம் காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றம் குறித்து பேசியது. இந்நிலையில் விவேக் அக்னிஹோத்ரி தனது Twitter பக்கத்தில் ‘KashmirUNREPORTED’ என்ற Teasar வீடியோவை வெளியிட்டுள்ளார். இது Zee5 OTTயில் வெளியாக உள்ளது.
இந்த வீடியோவில் கமெண்ட் செய்த ஒருவர், “நேரத்தை வீணடிக்காதீர்கள். நீங்கள் மனிதராக இருந்தால், “The Manipur Files” படத்தை இயக்குங்கள்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள “விவேக் அக்னிஹோத்ரி”, “என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எல்லா படத்தையும் நான் மட்டும் தான் எடுக்க வேண்டுமா? இந்தியாவில் யாரும் இயக்குநர் இல்லையா?” எனப் பதிவிட்டுள்ளார்.