NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராமாயணக் கதையில் நடிகர் யாஷின் சம்பளம் இத்தனை கோடியா ?

பிரபல ஹிந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இராமாயணக் கதையை 3 பாகங்களாகத் திரைப்படமாக இயக்க இருக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். சீதையாகச் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் February தொடங்குகிறது. நடிகர் யாஷ், July மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ.150 கோடி (இந்திய பெறுமதி) கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் Call Sheet எத்தனை நாள் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்தச் சம்பளம் மாறும் என்று Bollywood செய்திகள் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles