NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா..!

பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’ திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புகள் இலங்கையில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘VD12 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.அதன்போது சில அதிரடி காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் கௌதம் தின்னனுரி உள்ளிட்ட குழுவினர் இந்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

குறித்த படப்பிடிப்பு சுமார் 20 முதல் 30 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

‘VD12’ படம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles