NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘எதிர்நீச்சல்’ – கடைசி 10 நாட்களில் என்ன ஆனது?

எதிர்நீச்சல் Sun தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் TRPயில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தொடர். சீரியல் திடீரென முடிந்தது குறித்தும், கடைசி 10 நாட்கள் எப்படி இருந்தது பற்றியும் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், சீரியல் முடியப்போகிறது என 10 நாட்களுக்கு முன்பு காலையில் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் கூறினேன், உடனே எல்லோரும் அழுதுவிட்டார்கள்.

ஹரிப்பிரியா இனி இந்த வீட்டை நான் அதிகம் மிஸ் செய்வேன் என அழுதுவிட்டார், காரணம் அவருக்கு காட்சிகள் இல்லாத நேரத்தில் என்னுடைய வீட்டில் கூட வராத நிம்மதியான தூக்கம் இந்த வீட்டில் வருகிறது என தூங்கிவிடுவார்.

அவர் மட்டுமில்லை எல்லா நாயகிகளும் அழுதுவிட்டனர். கடைசி 10 நாள் படப்பிடிப்பில் தினமும் வருத்தப்பட்டார்கள்.

அதிலும் கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருக்கும் ஆறுதல் கூறுவதற்குள் எங்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles