NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே நாளில் திரைக்கு வர இருக்கும் 6 தமிழ் திரைப்படங்கள்

பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் “ஜே பேபி” படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல்  வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.

ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.

மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் “அரிமாபட்டி சக்திவேல்”. ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது. 

Share:

Related Articles