பாகுபலி, RRR போன்ற படங்களில் வெற்றியால் Kollywood திரையுலகினருக்கும் வரலாற்று சம்பந்தமான பிரம்மாண்ட படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
அந்த வகையில் தான் தற்போது கங்குவா, தங்கலான் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. சூர்யா நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘கங்குவா’ உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகை “திஷா பதானி”, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
G.V பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகின்றார். இது குறித்த புகைப்படத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் கடின உழைப்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர். மேலும், கங்குவா படத்திற்கு இருக்கும் வரவேற்பு மேலும் அதிகரித்து வருகின்றது.