NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கமல் முன்னிலையில் சண்டை “Bigg Boss” Season 7

“Bigg Boss” வீட்டில் சனிக்கிழமை Episodக்கு கமல்ஹாசன் வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி பேச தொடங்கினார்.

“Small Bos” வீட்டார் நடத்திய strike கன்டென்ட்டுக்காக மட்டுமே, மெசேஜ் சொல்கிறேன் என கூறுவதெல்லாம் சுத்த பொய் என கமல் விமர்சித்தார். அதை அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

விஷ்ணு கமலிடம் பேசும்போது ‘சுயபுத்தி இல்லாதவர்’ என்ற பட்டம் ஜோவிகாவுக்கு தான் கொடுத்திருப்பேன் என கூறினார். தான் மட்டும் தான் தனியாக தெரியவேண்டும் என ஜோவிகா எல்லா இடங்களிலும் மூக்கை நுழைக்கிறார் என விஷ்ணு கூறினார்.

சுயபுத்தி இல்லை என சொல்ல இது காரணம் இல்லையே என கமல் கூற, அதையே வைத்து ஜோவிகா விஷ்ணு உடன் வாக்குவாதத்தை தொடங்கினார்.

அப்போது வாடா, போடா என ஜோவிகா பேசியதால் விஷ்ணு டென்ஷன் ஆகி திட்ட தொடங்கிவிட்டார். ‘நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா. யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்துகொண்டு பேசு’ என சொல்லி திட்டிவிட்டார்.

கமல்ஹாசன் வரும் எபிசோடிலேயே நாளில்இப்படி ஒரு சண்டை நடந்திருக்கிறது.  

Share:

Related Articles