NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கவினுக்கு வில்லியாகும் ஆண்ட்ரியா

டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.

இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles