NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதல் குறித்த சர்ச்சைகளுக்கு விஜய் வர்மா விளக்கம்

Bollywood திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் வர்மாவுடன் இணைந்து ‘Lust Stories 2’ Web Seriesல் தமன்னா நடித்திருந்தார். 

இதையடுத்து நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும் காதலித்து வருவதாகப் பாலிவுட்டில் புரளிகள் பரவின.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் நடிகர் விஜய் வர்மா, “ஆரம்பக் காலத்தில் இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது எங்களுக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.

எங்களது தனிப்பட்ட விஷயங்களையும், பந்தங்களையும் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது. தமன்னாவுக்கும் எனக்கும் ஆழமான, அன்பான பந்தம்தான் இருக்கிறது. எங்களைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பரவும் புரளிகளை நாங்கள் இருவருமே Enjoy பண்ணிப் பார்ப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles