NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை- ரசிகர்கள் எதிர்ப்பு

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ .

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் june 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இணையத்தில் கீர்த்தி சனோன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் கீர்த்தி சனோன் சீதையாக நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles