NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு

பிரபல Bollywood நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டறிந்துள்ள போலீஸார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிசிடிவியில் சிக்கிய இருவரும் ஹரியாணாவின் குருகிராமில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

விஷால் என அடையாளம் காணப்பட்ட நபர்களில் ஒருவர், பிஷ்னோய் கும்பல் உறுப்பினர் ரோஹித் கோதாராவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

Share:

Related Articles