NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதனை செய்துள்ள Vijay TV பிரபலம் புகழ் மகள்

Vijay TV புகழ் இப்போது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் புகழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்தன்யா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் புகழ் தனது மகளின் முதல் பிறந்தநாளை பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

தற்போது 11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles