தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா.2005 இல் “அறிந்தும் அறியாமலும்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றார் .
கடந்தாண்டுகளில் ஆர்யாவின் திரைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பிற்காய் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.இந்நிலையில் ஆர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
ஆர்யாவின் அடுத்த படத்தை மினி ஸ்டுடியோஸ் LLP தயாரிக்க ஜியன் கிருஷ்ணா இயக்குகிறார்.மினி ஸ்டுடியோஸின் 14வது திரைப்படமான இது ப்ரோடுக்ஷன் no 14 எனும் தற்காலிக தலைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இராமநாதபுரத்தில் அதிகாரப்பூர்வமாக மங்கள பூஜையுடன் ஆர்யாவின் அடுத்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.







