NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டைட்டானிக் பட தயாரிப்பாளர் காலமானார்..!

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற திரைப்படங்களை ஜான் லாண்டவ் தயாரித்திருந்தார். அவர் இந்த படங்களுக்காக ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரபல தயாரிப்பாளரான ஜான் லாண்டவுக்கு தற்போது 63 வயதாகிறது. இவர் அண்மைக் காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜான் லாண்டவ் திடீரென உயிரிழந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஜான் லாண்டாவின் மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்

Share:

Related Articles