NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷ் நடிக்க இருந்த கதையில் பிக்பாஸ் கவின்? ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர்

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்து தனுஷ் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அறிவிப்பு கடந்த மாதம் வந்தது. மேலும் தனுஷ் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்றும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பியார் பிரேமா காதல் பட இயக்குனரை இளன் அடுத்து தனுஷ் உடன் கூட்டணி சேர்வார் என நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தனுஷ் அடுத்து சில வருடங்களுக்கு லைன்அப் வைத்திருக்கிறார்.

அதனால் தற்போது இளன் தனுஷுக்காக எழுதிய கதையில் நடிகர் கவினை நடிக்க வைக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும். 

Share:

Related Articles