NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழில் ஆடியோ சார்ந்த புதிய ஓ.டி.டி. தளம் அறிமுகம்

ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கி தனியார் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்துள்ளார். இவர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பல நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளார்.

வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சுவாரசியமான, ஆழ்ந்து போக செய்யும் அதீத கதைக் கேட்கும் அனுபவத்தை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரேடியோ ரூம், வெறும் ஆடியோ புத்தகம் மட்டுமே அல்ல. கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.

ரேடியோ ரூம் செயலியில் பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும் அரங்கேற இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

ரேடியோ ரூமில் தற்சமயம் தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. விரைவில் இந்திய மொழிகளில் மராத்தி மற்றும் வங்காள கதைகளும், பன்னாட்டு மொழிகளில் ஸ்பேனிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மானிய கதைகளும் அறிமுகப்படுத்தப் படவுள்ளன.

Share:

Related Articles