NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி விஜய்யின் குரலில் வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் முதல் பாடல்

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  அண்மையில் செப்டம்பர் 5ம் திகதி தி கோட் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என ஒரு ப்ரோமோ காணொளி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே தளபதி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்நிலையில் தளபதி விஜய் இப்பாடலை பாடியுள்ளமை  ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்று சம்பவம் உறுதி என வெங்கட் பிரபு தன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தளபதி பாடலுக்கு எல்லோரும் ரெடியா என்று பதிவிட்டுள்ளார்.

எனவே இன்று மாலை 6 மணிக்கு பிறகு பட்டி தொட்டியெங்கும் தளபதியின் குரல் எதிரொலிக்கும் என்பது உறுதி.

Share:

Related Articles