NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

”தி கோட்” கண்டிப்பா தளபதி பொங்கல் தான்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ . இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தி கோட் படத்தின் அப்டேட் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இது #தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் பொங்கலாக இருக்கும்.. அர்ச்சனகல்பாதி அவர்களே என்ன சொல்கிறீர்கள்.. என்று பதிவிட்டிருந்தார்.

வெங்கட் பிரபுவின் இந்த பதிவு மறுபதிவு செய்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி, ” கண்டிப்பாக.. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் தளபதி பொங்கலாக இருக்கபோகிறது.. ” என்று பதிவிட்டிருந்தார்.

இதன்மூலம், தி கோட் படம் தொடர்பான அப்டேட் இன்று வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Share:

Related Articles