NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர் திருவிழாவை தள்ளி வைத்த ‘லால் சலாம்’

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தின் டிரைலரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி ‘விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க.

குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது’ என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படம் பிப்ரவரி 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்திலும் சற்று குழப்பத்திலும் உள்ளனர்.

Share:

Related Articles