NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

த்ரில்லர் Web தொடரில் கீர்த்தி சுரேஷ், ராதிகா

கீர்த்தி சுரேஷும், ராதிகா ஆப்தேவும் புதிய Web தொடர் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இத்தொடர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Bollywoodல் படங்களை மட்டுமே தயாரித்து வந்த யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் அண்மையில் தனது முதல் Web சீரிஸான “The Railway Man” தொடரை தயாரித்தது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தத் தொடர் “Netflix” OTT தளத்தில் காணக் கிடைக்கிறது. இதன் அடுத்த கட்டமாக கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே இணையும் தொடரை உருவாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles