NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 62.

விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான’பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles