NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்தில் தரிசனம்

தமிழில் தாம்தூம், சந்திரமுகி-2, தலைவி உள்ளிட்ட படங்களிலும், Bollywoodல் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.

இந்தநிலையில் கங்கனா ரனாவத் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு வந்தார். அங்குள்ள ஆதியோகி சிலையை தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிடம் ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

Share:

Related Articles