NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை “பிபாஷா பாசு” கண்ணீர் பேட்டி

பிரபல Bollywood நடிகை “பிபாஷா பாசு” தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இவர் நடிகர் “கரண் சிங் குரோவரை” காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் பெண் குழந்தைப் பிறந்தது.

இந்நிலையில் பிபாஷா அளித்த பேட்டியில், தனது குழந்தைக்குப் பிறக்கும் போதே இதயத்தில் 2 துளைகள் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ குழந்தை பிறந்து 3 நாட்கள் கழித்து மருத்துவர்கள் இதைச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தோம். அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டும் என்றார்கள்.

தானாகவே அது சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஒரு கட்டத்தில் ‘துளைகள் பெரிதாக இருக்கின்றன. தானாக சரியாக வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

பிறகு அறுவைச் சிகிச்சைக்குச் சம்மதித்தோம். அந்த வேதனையை விவரிக்க முடியாது. 3 மாதத்திலேயே தேவிக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. இப்போது நலமாக இருக்கிறாள். இது போன்று எந்த தாய்க்கும் நடக்கக் கூடாது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles