NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேக்கப் போட்டோம் – நினைவுகளை பகிர்ந்த குஷ்பு

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகை குஷ்பு இப்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குஷ்பு தமிழில் நடிக்க தொடங்கியதும் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். விரைவாகவே டப்பிங்கும் பேச ஆரம்பித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தாலும் தெலுங்கில் அதிக அளவு நடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தெலுங்கு திரையுலகம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறியதால் தான் தெலுங்கில் அதிக அளவில் நடிக்க முடியாமல் போனது. ஏற்கனவே எனது குடும்பத்தினரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துவிட்ட நிலையில் மீண்டும் ஹைதராபாத்துக்கு செல்ல விரும்பவில்லை. தற்போது சினிமா உலகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அப்போது கேரவன் வசதி எல்லாம் கிடையாது. அந்த காலத்தில் நாங்கள் இருட்டு அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேக்கப் போடுவோம். பாத்ரூமில் உடை மாற்றுவோம். மேக்கப் இல்லாத போது மஞ்சள் பொடியை வைத்து முகத்தில் கலர் கரெக்ஷன் செய்தோம். அது கோவில் காட்சிகளுக்கு கை கொடுத்தது. தற்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வந்து விட்டது. எல்லாமே மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Share:

Related Articles