NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படத்தின் தலைப்பை மாற்றிய நடிகர் “அக்‌ஷய் குமார்”

இந்தியாவின் பெயர் பாரத் என்ற மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டதில் இருந்து விவாதங்கள் எழுந்துள்ளன. திரையுலகிலும் இதே விவாதம் தான். விவாதங்களுக்கு மத்தியில், Bollywood நடிகர் அக்‌ஷய் குமார் தான் நடிக்கும் புதிய படத்தின் பெயரை “Mission Raniganj The Great Bharat Reseue” என மாற்றியுள்ளார்.

இத்திரைப்படம் ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது.

1989 ராணிகஞ்சில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய அனைத்து சுரங்கத் தொழிலாளர்களையும் காப்பாற்ற போராடியவர் ஜஸ்வந்த் சிங் கில். நிலக்கரி சுரங்க மீட்புப் பணியை வழிநடத்திய மறைந்த ஸ்ரீ ஜஸ்வந்த் சிங் கில்லின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

பரினீதி சோப்ரா, குமுத் மிஸ்ரா, பவன் மல்ஹோத்ரா, ரவி கிஷன், வருண் படோலா, திபியேந்து பட்டாச்சார்யா போன்றோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Share:

Related Articles