NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல ஆண்டுகளாக காதல் கடிதம் எழுதி வரும் ‘அமிதாப் பச்சன்’

Bollywood நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடன் சேர்ந்து நடித்த ஜெயா பாதுரியை காதலித்தார். இதையடுத்து கடந்த 1973ம் ஆண்டு மாதம் 3 மும்பையில் அமிதாப் பச்சன், ஜெயா பாதுரியின் திருமணம் நடந்தது. 

கோன் (Kaun Banega Crorepati 12) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யோகேஷ் என்பவர் அமிதாப் பச்சனிடம் அவரின் காதல் வாழ்க்கை மற்றும் ஜெயாவிடம் எப்படி காதலை சொன்னீர்கள் என்று கேட்டார்.

திருமணமாகி 51 வருடமாகியும் இன்னும் ஜெயாவுக்கு காதல் கடிதம் எழுதி வருவதாக அமிதாப் பச்சன் கூறியதை கேட்டு அரங்கமே அதிர்ந்தது.

காதல் கடிதம் விஷயம் ரொம்ப சூப்பராக இருக்கு அமதிாப்ஜி. இனி நாங்களும் எங்கள் மனைவிக்கு காதல் கடிதம் எழுதி அசத்தப் போகிறோம் என ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles