NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல மொழிகளில் வெளியாகும் விடாமுயற்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. ‘விடாமுயற்சி’ திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.

Share:

Related Articles