NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாக்கியலட்சுமி தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்

“Vijai TVயின் பாக்கியலட்சுமி தொடர் தற்போது சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.

கணவரை விவாகரத்து செய்த பாக்யா எப்படி சுயமாக உழைத்து மொத்த குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் என இந்த தொடரில் காட்டப்பட்டு வருகிறது.

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து தற்போது ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது அக்ஷயா நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மேலும் செழியனின் புதிய காதலியாக நடித்து வந்த நடிகை தீப்தி விலகிய நிலையில் அவருக்கு பதில் தற்போது ரேமா அசோக் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இப்படி ஒரே நாளில் இரண்டு நடிகைகள் மாற்றப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. 

Share:

Related Articles