கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கி திரை உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஒரு இயக்குனர்தான் நெல்சன்.
இவரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் 2023 ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் ஜெயிலர் . இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் பாகம் இரண்டிற்கான படப்பிடிப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் ‘ஜெயிலர்-2’ ற்கு பிறகு யாருடன் இனைந்து திரைப்படம் இயக்க உள்ளார் என கேள்விகள்
எழ ஆரம்பித்தன, அப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின என தகவல் வெளியாகி இருக்கிறது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை மறைமுகமாக கூறியிருந்தார். ” மேலும் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.