NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பேரில்லூர் பிரீமியர் லீக்”  January 5 முதல் OTT தளத்தில்

“Disney Plus Hot Star” சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள  தொடரான​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த தொடர் வரும் January 5 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லரில், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், சிரிக்க வைக்கும் நகைச்சுவையின் கலவையாக “பேரில்லூர் பிரீமியர் லீக்” ட்ரெய்லர் உள்ளது.

நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இதில் நடித்துள்ளனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை ரசிக்கும்படியாக உள்ளது.

பேரில்லூர் பிரீமியர் லீக்’ 7 மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மற்றும் பெங்காலி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை காணலாம்.

Share:

Related Articles