NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிவுட் கவர்ச்சி நடிகைக்கு பிடியாணை!

தமிழில் வெளிவந்த ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் ஸரீன் கான்.

ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு கொல்கட்டாவில் நடந்த துர்கா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நடனம் ஆடவும் ஸரீன் கானுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியும் பல இலட்சம் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் ஸரீன் கான். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கோல்கட்டாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஸரீன் கானுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ஸரீன் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தற்போது ஸரீன் கானுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Share:

Related Articles