சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் “மாவீரன்”
கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஓவிய கதைகள் எழுதி வருகிறார். இந்த ஓவியத்தில் வரைந்து வரும் கதாபாத்திரம் தான் மாவீரன்.
தனது கதையில் மாவீரனை தைரியமான கதாபாத்திரமாக வடிவமைக்கும் சிவா, தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சனை தனக்கும் தனது குடும்பத்திற்கும் வந்தாலும், பொறுமையாக வாழ வேண்டும் என சொல்லும் நபராக இருக்கிறார்.
இந்நிலையில் தான் சிவகார்த்திகேயனுக்கு எமனாக வருகிறார் அமைச்சர் மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி அவரை சுற்றி இருக்கும் மக்களுக்கும் மிஷ்கினால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
அனைவரையும் எளிதில் கவரும் வகையில் மாவீரனை வடிவமைத்த விதம் சிறப்பு.
மண்டேலா படத்திற்கு பின் மீண்டும் சிறப்பாக படைப்பை கொடுத்துள்ளார். Action , நகைச்சுவை இருந்தாலும், தன்னுடைய அரசியல் சார்ந்த விஷயங்களை அழகாக படத்தில் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஒளிப்பதிவு படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. Editing அருமை பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் சிறப்பு.
சிவகார்த்திகேயன் மீண்டும் தன்னை ஒரு Action ஹீரோவாக மட்டுமன்றி சிறந்த நடிகராகவும் நிரூபித்துள்ளார்.
மாவீரனுக்கு முன் வெளிவந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் மாவீரன் படத்தின் மூலம் அடித்து நொறுக்கியுள்ளார்.
குறிப்பாக பயந்த சுபாவத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. மேலும் சன்டை காட்சிகளில் சிவகார்த்திகேயன் அருமையாக நடித்துள்ளார்.