NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது

2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28 திகதி விஜயகாந்த் காலாமானார்.

1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு – ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) – பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு

பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் விவரம்:-

1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு – ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) – பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு

பத்ம பூஷன் விருது:

6. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) – தமிழ்நாடு, 7. ஹோர்முஸ்ஜி- மகாராஷ்டிரா, 8. மிதுன் சக்ரவர்த்தி- மேற்கு வங்காளம், 9. சீதாராம் ஜிண்டால்- கர்நாடகா, 10. யங் லியு- தைவான், 11. அஷ்வின் பாலசந்த்- மகாராஷ்டிரா, 12. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்)- மேற்கு வங்காளம், 13. ராம் நாயக் – மகாராஷ்டிரா, 14. தேஜஸ் மதுசூதன் படேல்- குஜராத், 15. ஓலஞ்சேரி ராஜகோபால்- கேரளா, 16. ராஜ்தத்- மஹாராஷ்டிரா,

17. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை – ஆன்மிகம் – லடாக், 18. பியாரேலால் சர்மா- மகாராஷ்டிரா, 19. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்- பீகார், 20. உஷா உதுப்- மேற்கு வங்காளம், 21. பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்)- கேரளா, 22. குந்தன் வியாஸ் – மகாராஷ்டிரா

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles