NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாபெரும் படத்திலிருந்து வெளியேறிய நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா.

இவர் கைவசம் தற்போது Test மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கில் கண்ணப்பா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கடவுள் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. Pan இந்தியா Star ஆன பிரபாஸ் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

சிவன் ரோலில் நடிக்கவிருந்த பிரபாஸ் தற்போது அப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். இதை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவிருந்த சிவன் கதாபாத்திரத்தில் பிரபல Bollywood நடிகர் அக்ஷய் குமார் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமாரின் வருகை காரணமாக நடிகை நயன்தாராவும் தற்போது கண்ணப்பா படத்திலிருந்து விலகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles