“மாமன்னன்” படம் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் எந்தளவு பேச்சுக்களை கிளப்பியதோ, அதே அளவிற்கு தற்போது OTTயிலும் வெளியாகி பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது Twitte பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘நான் தாமதமாக Partyக்கு வந்துள்ளேன். மாமன்னன் படம் அருமையாக உள்ளது. அனைத்து துறைகளிலும் நேர்த்தியான வேலைபாடுகள் தெரிகின்றன.
படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை’ என கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், Fahath Fazil மற்றும் A.R ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த ‘மாமன்னன்’ படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையில் ‘வாழை’ என்ற படத்தையும் இயக்கி முடித்து முடித்துள்ளார் மாரி செல்வராஜ். குழந்தைகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘வாழை’ படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.