NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் இணையும் தனுஷ்- A.R ரஹ்மான் கூட்டணி

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு A.R ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு தனுஷ்-A.R ரஹ்மான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது.

நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share:

Related Articles