NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல் நாள் வசூலில் வெறித்தனம் காட்டிய ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles