NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

’லாபதா Ladies’ விமர்சனம்

அமீர்கான் தயாரிப்பில் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த March 1 வெளியான ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் Netflix OTT தளத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுக்க நினைக்கும் பலரும் பார்க்க வேண்டிய படமாக இது உள்ளது.

குக்கிராமத்தில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு நாயகன் தீபக் குமார் ரயிலில் பயணிக்கிறார்.

ஆனால், அந்த ரயிலில் அதே போல பல புதுமண தம்பதியினர் பயணித்து வருகின்றனர். மணப்பெண் முக்காடு போட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் தனது ஊர் வந்து விட்டது என தனது மனைவியை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கையை பிடித்து இழுக்க அவரும் இவருடன் வந்து விடுகிறார்.

தனது வீட்டிற்கு வந்தவுடன் ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது தான் பொண்ணு மாறிப்போன விஷயமே தெரிய வருகிறது.

அதன் பின்னர் ரயிலில் தொலைத்த தனது மனைவியை தேடி கண்டுபிடித்தாரா? இவர் அழைத்ததும் இன்னொருவரின் மனைவி இவருடன் வந்தது ஏன் என்பதை ஏகப்பட்ட சோஷியல் மெசேஜ்களை அடுக்கி செம காமெடியாக கொடுத்துள்ளனர்.

உலகில் மோசமான மனிதர்கள் மட்டுமின்றி நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் என்றும் சில சமூக சீர்கேடுகள் காரணமாகத்தான் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன என்பதையும் பெண்கள் தங்கள் சிறகை விரித்து பறக்க முடிவு செய்து விட்டால் அவர்களை யாரும் எந்த சக்தியும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles