NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிங்குசாமிக்கு கால்ஷீட் கொடுக்க இழுத்தடிக்கும் சூரி, காரணம் இதுவா?

தென்னிந்திய சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து அதற்கு பின்பு காமெடி நடிகராக, தற்போது தனது திறமையால் கதாநாயகனாக மாறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலைப் படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த படத்தில் தனது உடலை வருத்தி மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருந்தார் சூரி. அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக அந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நாயனாக நடிக்க சூரிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சூரி. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இதிலும் நடிகர் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது சூரியை வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் லிங்குசாமிக்கு கால்சீட் கொடுக்க சூரி இழுத்தடித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு காரணம் அவர் சூரியை வைத்து காமெடி படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம். மீண்டும் காமெடி டிராக்டில் போக வேண்டாம் என சூரி யோசிப்பதனால் அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles