NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் இதை மிக மிக கோலாகலமாக நடத்த அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய அவரது ரசிகர்கள் தொடங்கி விட்டனர். பிறந்த நாள் முன்னிட்டு கடந்த வாரத்தில் விஜய் பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் டிரெண்டானது.

இதற்கிடையே, நடிகர் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அந்த படம் செப்டம்பர் 5-ம் திகதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 50வது பிறந்த ஆண்டில், சினிமா பிரவேசத்தில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வரும் 21ம் திகதி அன்று ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.

அதன்படி, 21ம் திகதி அன்று பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ்மகன் ஆகிய 5 படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதில், மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share:

Related Articles