NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் தொடங்கும் கமல் -மணிரத்னம் கூட்டணி படப்பிடிப்பு

கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘கேஎச்234’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலானது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share:

Related Articles