NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக் கானின் அழைப்பும் ராம் சரண் ரசிகர்களின் கோபமும்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் July 12 திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டங்கள் March 1 முதல் 3வரை மிகப்பிரமாண்டமாக குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘நாட்டு நாட்டு ’பாடலுக்கு  ஷாருக் கான்,  சல்மான்கான் உள்ளிட்ட பிரபலங்கள் நடனமாடினர். அப்போது ஷாருக் கான் ‘இட்லி, வடை, சாம்பார்’ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? மேடைக்கு வாருங்கள் என்று ராம் சரணை அழைத்திருக்கிறார்.

இந்நிலையில் ராம் சரணின் ஒப்பனை கலைஞர்  ஜெப ஹாசன் என்பவர்  “நான் ஷாருக் கான் ரசிகன், ஆனால் அவர் ராம் சரணை ‘இட்லி, வடை, சாம்பார்’ என்று மேடையில் அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. இது அவமரியாதையான செயல். இதனால் சிறிது நேரம் கழித்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

அவர் நகைச்சுவைக்காகத்தான் அப்படி பேசியிருக்கிறார் அதில் தவறு ஏதும் இல்லை என்று சிலர் ஷாருக் கானிற்கு ஆதரவாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.  

Share:

Related Articles