NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்டார் படத்தின் பாடல் காட்சி முன்னோட்டம் வெளியானது

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னதிரை நாயகனாக இருந்து வெள்ளிதிரைக்கு வந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினின் புகழ் ஓங்கியது.

குருபிரசாத் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு இயக்கத்தில் ஓடிடி யில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

பின் மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த  டாடா படத்தில் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,

கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான “விண்டேஜ் லவ்” முன்னோட்டம் இன்று  வெளியாகியது. பாடலின் முழு வீடியோ ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Share:

Related Articles