NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சினிமா பாணியில் நடந்த கொலை – தந்தையைக் கொன்றவரை

அம்பாந்தோட்டையில் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த 12 வயது சிறுவன் தனது தந்தையை சுட்டுக் கொன்ற கொலையாளியை 7 வருடங்களின் பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இரண்டு கொலைகள் உட்பட பல குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் வீதியின் குறுக்கே உள்ள வீதித் தடையைக் கடந்து செல்ல தனது மோட்டார் சைக்கிளை வேகத்தைக் குறைத்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, கொலையாளி தப்பி ஓடியுள்ளார்.

கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர் . இந் நிலையில் கடந்த 29ஆம் திகதி 19 வயதுடைய இளைஞன் ஒருவர் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

கடந்த 21ம் திகதி இரவு, 7 வருடங்களுக்கு முன் தன் தந்தையை கொலை செய்த கொலையாளியை கொலை செய்ததாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

வாக்குமூலங்களைப் பதிவு செய்த ஹம்பாந்தோட்டை பொலிஸார் 19 வயதுடைய சந்தேக நபரை நேற்று முன்தினம் மாலை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share:

Related Articles