மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் நாளை விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி கல்வி செயற்பாடுகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அந்தந்த மாகாண கல்வி அமைச்சுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது