https://www.dailythanthi.com/news/world/myanmar-airstrike-on-school-kills-at-least-22-dozens-injured-in-bombing-1157534
மியன்மாரின் தபாயின் நகரத்தில் உள்ள கிராமத்தின் மீது நேற்று காலை 9 மணி அளவில் இராணுவத்தினர் விமானங்களில் இருந்து தாக்குதலில் இறங்கினர். அப்போது அந்த பகுதியில் இருந்த பாடசாலை மீது ஒரு போர் விமானம் வீசிய வெடிகுண்டு விழுந்து வெடித்தது.
இதையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.