NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டக்களப்பு மண்டூரில் ஒரே இரவில் 8 வீடுகளை உடைத்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருட்டு..!

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடு உடைத்து கொள்ளை இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச் செல்லப்பட்ட சம்பவம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு இடம் பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு வழமைபோல வீடுகளை பூட்டிவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு  அந்த பகுதியில் உள்ள 8 வீடுகளின் யன்னல் கதவு, மற்றும் சமையலறை யன்னல் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள்  அலுமாரிகளை சோதனையிட்டனர் இதன் போது இரு வீடுகளில் 60 பவுண் தங்க ஆபரணங்களை திருடியதுடன் ஏனைய வீடுகளில் எந்த விமதமான பொருட்களும் கிடைக்காததால் அங்கிருந்து திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளதாக பொலிசாரி ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து அங்கு மேப்ப நாய்களுடன்  தடவியல் பிரிவு பொலிசார் வரவ ழைக்கப்பட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை ஒரே இரவில் ஒரு பிரதேசத்தில்  8 வீடுகளை உடைத்து திருடர்கள்; திருடயதையடுத்து அந்தபகுதி மக்கச் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Share:

Related Articles