அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் திடீரென ட்ரம்புக்கு ஆதரவு அதிகரித்து முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், டெசிஷன் டெஸ்க் ஹெச்குயூ-தி ஹில் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், அவருக்கு 52 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா, ஜோர்ஜியா மற்றும் வட கரோலினா மாநிலங்களில் ட்ரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸுக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.