இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கௌசல்ய நவரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன விலக வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் சபை ஏகமனதாக தீர்மானம் ஒன்றை கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் 2023ஆம் ஆண்டின் இறுதிப் பாதியில் ஊழலுக்கு எதிரான திட்டமொன்றிற்கான விலைமனுக்களை அழைத்திருந்த நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு 24 மில்லியன் ரூபா நிதி கிடைத்தது.
இந்த விடயத்தில் ஏலம் எடுப்பதிலும் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதிலும் வெளிப்படைத்தன்மையின்றி செயற்பட்டமை தொடர்பில் கௌசல்ய நவரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.